போக்குவரத்து தீவுக்கு பாலசந்தர் பெயர்
சென்னை, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அருகே, லஸ் சர்ச் சாலையில் உள்ள போக்குவரத்து தீவுக்கு, ‘இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு’ என, முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
புதிதாக பெயர் சூட்டப்பட்ட, ‘இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு’ பெயர் பலகையை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி., தமிழச்சி, எம்.எல்.ஏ., வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.