புது வீடு ஒப்படைக்க தாமதம் ஓனருக்கு ரூ.8.60 லட்சம் இழப்பீடு

சென்னை, பழைய மாமல்லபுரம் சாலையில் கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில், அக் ஷயா நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் வீடு வாங்க தங்கராஜு சாருகேசி என்பவர், 2011ல் ஒப்பந்தம் செய்தார்

இதற்காக, அவர், 38.22 லட்ச ரூபாயை செலுத்தியுள்ளார். ஒப்பந்தப்படி 30 மாதங்கள், அதாவது 2013ல் வீட்டை ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் உறுதியளித்து இருந்தது.

ஆனால், குறிப்பிட்ட காலத்தில் அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. மேலும், மதிப்பு கூட்டு வரி காரணமாக கூடுதல் தொகையை அந்நிறுவனம் கேட்டதால் பிரச்னை ஏற்பட்டது.\

கடந்த, 2018, 19ல் அங்கு சென்று பார்த்தபோது கட்டுமானப் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாதது தெரியவந்தது. இதையடுத்து தங்கராஜு சாருகேசி சார்பில் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்காதது உறுதியாகிறது. இதில் குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காமல் மன உளைச்சல் ஏற்படுத்தியது,

வாடகை வருவாய் இழப்பு ஆகியவற்றை ஈடுகட்டும் வகையில், 6.10 லட்ச ரூபாய், தாமதத்துக்கு, 2 லட்ச ரூபாய், வழக்கு செலவுக்காக, 50,000 ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும்.

உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து, 90 நாட்களுக்குள் இழப்பீட்டை கட்டுமான நிறுவனம் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *