தெய்வத்தின் தேர்வு பன்னீர்..! பூசாரியின் தேர்வு எடப்பாடி…! வெளுத்து வாங்கும் மருது அழகுராஜ்…

 அதிமுக அரசியலில் எடப்பாடி, பன்னீர் இவர்கள் இடையே ஏற்பட்ட ஒற்றை தலைமை பிரச்சனையில், பன்னீர் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார் நமது அம்மா முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ்.   அவர் பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் யூடுப் சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். பெரும்பாலும் அவருடைய பேட்டியில் பன்னீர் அவர்களை ஆதரித்தும், எடப்பாடி அவர்களின் தந்திரங்களை, நரி தந்திரங்கள் என்றும், கடுமையாக விமர்சித்து வருகிறார். ஜூன் 8-ம் தேதி வரை ஒற்றை தலைமை என்ற பேச்சு கற்பனை என்று சொன்ன எடப்பாடி அவர்கள், ஒரு வார காலத்திற்குள் ஒற்றை தலைமை விவகாரத்தை ஏன் கையில் எடுக்க வேண்டும். தற்போது அதற்கு என்ன சூழல் வந்தது என்றும், மேலும் ஒரு ஜனநாயகமற்ற விரோத முறையில் ஒரு கட்சியை, வெறும் பொதுக்குழு உறுப்பினர்களை  மட்டும் விலைக்கு வாங்கி இந்த கட்சியை அபகரிப்பது ஏன்?. அதிமுக கட்சியை எம்ஜிஆர் தொடங்குவதற்கு மூல காரணமே, திமுக கட்சியின் இதுபோன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் யாரையும் நீக்க முடியும் என்ற சூழல் உருவானதால்தான், அதிமுக என்ற கட்சியை உருவானது.  எம்ஜிஆர் இந்த கட்சியை தொடங்கும் போது அவர் எழுதிய உயில் சாசனப்படி இந்த கட்சியின் பொதுச் செயலாளர் அவர்களை, இந்த கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும்,பொதுக்குழு உறுப்பினர்களோ, செயற்குழு உறுப்பினர்களோ தேர்ந்தெடுக்க முடியாது என்றும், அடிப்படை உறுப்பினர் எவரும் இந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆகலாம் என்பது எம்ஜிஆர் அவர்கள் எழுதி வைத்த உயில். அது மாண்புமிகு அம்மையார் அவர்களாலும் இந்த உயில் இறக்கும் வரை காப்பாற்றபட்டு வந்தது. அம்மா அவர்கள் அமர்ந்த பொதுச் செயலாளர் பதவி அம்மா அவர்களைத் தவிர யாருக்கும் இல்லை என்றும், அவர்தான்இந்த கட்சிக்கு நிரந்தர பொதுச் செயலாளர் என்றும், அறிவித்துவிட்டு இன்று அந்த பதவியை தனக்கு என்று எடப்பாடி அறிவித்துக் கொண்டது, புரட்சித்தலைவிக்கு செய்கிற மிகப்பெரிய துரோகம் அல்லவா?.   இது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு நதியின் இரு கரைகள் போல் அண்ணன் எடப்பாடியும் பன்னீரும் இருந்து வந்தனர். இன்று சிலரின் சூழ்ச்சியால் நயவஞ்சகத்தால் அம்மாவால் அடையாளம் காணப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்ட பன்னீரை எதற்காக புறந்தள்ள வேண்டும்?. அவர் என்ன தவறு செய்தார்?. தெய்வத்தின் தேர்வு பன்னீர், அதாவது மாண்புமிகு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களால் ஆட்சியில் அமர்த்தபட்டவர் பன்னீர்செல்வம். அவர் இருக்கும் போது இரண்டு முறை முதல்வராக இருந்து பரதனாக நடந்து கொண்டவர் பன்னீர்செல்வம். ஆனால் எடப்பாடி பூசாரியின் தேர்வாவர். மேலும் நன்றி என்பது எடப்பாடி அவர்களுக்கு துளி அளவும் இல்லை. அதற்கு உதாரணம் சசிகலா சிறைக்குச் செல்லும் முன் அவரது காலிலே தவழ்ந்து முதலமைச்சர் பதவியைப் பெற்று, இன்று சசிகலா அவர்களை சூரியனை பார்த்து நாய் குறைப்பது என்று சொல்லும், ஒரு நன்றி கெட்ட மனிதர் எடப்பாடி பழனிச்சாமி.  அவரது நரி தந்திரங்கள் நிச்சயம் தொண்டர்களிடம் தோற்றுப் போகும். மேலும் அம்மா வாழ்ந்த கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற , கொள்ளை, கொலை வழக்கில் எடப்பாடி அவர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக மறைமுகமாகவும் தெரிவிக்கிறார். மேலும் அந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று முதல்வருக்கும் தெரிவித்து வருகிறார். மேலும் கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக நான்கு வருடம் ஆட்சியில் இருந்தபோதும் அது பற்றி உண்மைகள் வெளிவராதது ஏன்? தற்போது திமுக ஆட்சியிலும் வெளி வராதது ஏன்? என பல்வேறு கேள்விகளை அடுக்குகிறார். அவரது பேட்டிகள் யாவும் எடப்பாடி பழனிச்சாமியின் தந்திரங்களை நரி தந்திரங்கள் என்று வெளுத்து வாங்குவதுடன் அதை தெள்ளத் தெளிவாக மீடியாக்களிடம் எடுத்துச் சொல்வதும் எடப்பாடி அவர்களை வெளுத்து வாங்குவதாக தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *