அரசு ஊழியர் வீட்டில் திருடியோர் கைது
ஆவடி, பட்டாபிராம், நெமிலிச்சேரி, ஸ்ரீஜோதி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 52. எலக்ட்ரீசியன். இவரது மனைவி தலைமை செயலகத்தில் பணிபுரிகிறார். தம்பதியின் இரண்டு மகன்கள், கல்லுாரியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த அக்., 29ம் தேதி, அவரது இளைய மகன் கல்லுாரி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த, 21 சவரன் நகை திருடு போனது தெரிந்தது. இது குறித்த புகாரின்படி, பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதில், திருட்டில் ஈடுபட்ட தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உதயகுமார், 19, மற்றும் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சையது அலி, 26, ஆகியோரை, நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 20 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது