புகார் பெட்டி பாதாள சாக்கடை மூடி சரி செய்யப்படுமா?
பாதாள சாக்கடை மூடி சரி செய்யப்படுமா?
சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கம், 187வது வார்டுக்கு உட்பட்ட பாலய்யா கார்டன், பிருந்தாவன் தெருவில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான ‘மேன்-ஹோல்’ சற்று உயர்த்தி அமைக்கப்பட்டது.
அத்தெருவில் செல்லும் கனரக வாகனங்களால்,’மேன்-ஹோல்’ மூடியை சுற்றி உள்ள சிமென்ட் கலவை கொஞ்சம், கொஞ்சமாக உடைந்துவிட்டது.
இதனால், ‘மேன்-ஹோல்’ உள்ள பகுதி மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவியர், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அந்த பள்ளத்தில் சிக்கி விழுந்து விபத்துக்களை சந்திக்கின்றனர்.
இதேநிலை நீடித்தால்,’மேன்ஹோல்’ உள்வாங்கி பெரும் விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் முழுமையாக சீரமைக்க வேண்டும்.
– எஸ்.ஸ்ரீசரண்,
மடிப்பாக்கம்.