தேர்வு எழுத அனுமதி மறுப்பு
சீர்காழி விவேகானந்தா பள்ளியில் குரூப்-4 தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டிருந்தது. விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி மற்றும் விவேகானந்தா குட் சமரிடன் பள்ளி ஆகிய இரண்டும் ஒரே வளாகம் என்பதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக 40-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் 9 மணிக்கு பதிலாக 9-05 மணிக்கு அதாவது 5 நிமிடம் காலதாமதமாக தேர்வு மையத்திற்கு வந்ததால் அவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் தங்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறு எவ்வளவோ கெஞ்சி கேட்டும் அதிகாரிகள் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க மறுத்து விட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் வாகனத்தை நிறுத்தி தாமதத்திற்கான காரணத்தை தேர்வு எழுத வந்தவர்கள் எடுத்துக் கூறினர். அதற்கு அவர், இதுகுறித்து ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டு உள்ளதே என்று கூறினார். இதனால், தோ்வு எழுத ஆர்வத்தோடு வந்தவர்கள் கண்ணீரோடு திரும்பிச் சென்றனர்.