பல்லாவரத்தில் பா.ம.க., ஆர்்ப்பாட்டம்
பல்லாவரம், வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
அந்த உத்தரவு வந்து, 1,000 நாட்கள் கடந்த பின்னரும், இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும், தி.மு.க., அரசை கண்டித்து, பா.ம.க., சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
பல்லாவரத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பா.ம.க., செயலர் வெங்கடேசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும், தி.மு.க., அரசை கண்டித்து, அவர்கள் கோஷம் எழுப்பினர்.