பல்கலை நீச்சல் 600 வீரர்கள் பங்கேற்பு
சென்னை, அகில இந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில், தென்மேற்கு மண்டல பல்கலை இடையிலான நீச்சல் மற்றும் டைவிங் போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை நீச்சல் வளாகத்தில், கடந்த வாரம் நடந்தன
அதுபோல், வடமேற்கு மண்டல பல்கலை இடையிலான நீச்சல் போட்டிகள், கடந்த மாதம் நடந்தன. இவ்விரு மண்டல அளவிலான போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 16 இடங்களை பிடித்த வீரர் மற்றும் வீராங்கனையர், அகில இந்திய போட்டிக்கு தேர்வாகினர்.
எஸ்.ஆர்.எம்., பல்கலையில் இன்று துவங்கும் அகில இந்திய போட்டி, 27ம் தேதி நிறைவடைகிறது. ௫௦௦ பல்கலைகளில் இருந்து 1,200 வீரர்கள் பங்கேற்கின்றனர்.