சென்னை – புவனேஸ்வர் விமான சேவை துவக்கம்
சென்னை, சென்னையில் இருந்து ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் இடையே, தினசரி மூன்றாவது விமான சேவையை, ஜன.,14 முதல் இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது.
சென்னையில் இருந்து, ஒடிசா மாநிலம், புவேனஸ்வர் நகருக்கு, இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், விமான சேவையை வழங்கி வருகின்றன.
இண்டிகோ நிறுவனம் காலை 6:10, மாலை 5:55 மணி என, இரண்டு விமான சேவைகளை வழங்கி வந்தது. பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், வரும் ஜன., 14 முதல் மூன்றாவது சேவையை துவங்க திட்டமிட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் இருந்து தினசரி காலை 8:30 மணிக்கு புறப்படும் விமானம் காலை 10:20 மணிக்கு புவனேஷ்வர் சென்றடையும். புவனேஸ்வரில் இருந்து காலை 11:00 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 12:40 மணிக்கு சென்னை வந்தடையும்.
இதன் வாயிலாக, சென்னை – புவனேஸ்வர் இடையே மொத்தம், ஐந்து விமான சேவை இயக்கப்படுகிறது.