10 ஆண்டுக்கு பின் நிழற்குடை திறப்பு
செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆரில் முக்கிய சந்திப்பாக குமரன் நகர் உள்ளது. இங்கு இருந்து செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் நோக்கி செல்லும், 80 அடி அகல நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை உள்ளது.
ஓ.எம்.ஆரில் இருந்து, இணைப்பு சாலை வழியாக, செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்திற்கு, 20 நிமிடத்திற்கு ஒரு பேருந்து செல்கிறது.
இங்கு நிழற்குடை இல்லாததால், பயணியர் பத்து ஆண்டுகளாக சாலையோரம் வெயில், மழையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், மாநகராட்சி சார்பில், 16.70 லட்சம் ரூபாய் செலவில், நிரந்தர கான்கிரீட் கட்டமைப்புடன் நிழற்குடை அமைக்கப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்து, நேற்று திறக்கப்பட்டது.