குடிக்க பணம் இல்லாததால் வழிப்பறி
கொளத்துார், கொளத்துார், நேர்மை நகரை சேர்ந்தவர் தாரா, 47; செவிலியர். கடந்த 20ம் தேதி, நேர்மை நகர் சுடுகாடு அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த இரு வாலிபர்கள், தாரா அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றனர்
கொளத்துார் போலீசார் வழக்கு பதிந்து, வாலிபர்கள் வந்த பைக் எண், கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர். செங்குன்றம், வடகரை அருகே அழிஞ்சிவாக்கம் பகுதியில், பைக் இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, செயின் பறித்த அழிஞ்சிவாக்கத்தை சேர்ந்த அஜித்குமார், 26, சுதாகர், 30, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மது குடிக்க பணம் இல்லாததால், அறிமுகம் இல்லாத இடம் சென்று, முதன்முதலாக செயின் பறித்தது தெரியவந்தது.