வியாசர் பாடியில் நுாலகம் அமைக்க 10 ஆண்டாக தொடரும் போராட்டம்

வியாசர்பாடி, சென்னை, வியாசர்பாடி, 46வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், 5,000த்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர்.

வியாசர்பாடி, மெகசின்புரம் 150 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சத்தியமூர்த்தி நகர் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டு, 60 ஆண்டுகள் மேலாகிறது.

இங்கு நுாலகம் கட்டி தர வேண்டுமென, 50 ஆண்டுகளாக அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை 46வது வார்டு பகுதியில் நுாலகம் கட்டப்படவில்லை.

இதனால், இந்த வார்டுக்குட்பட்ட மாணவ, மாணவியர், இளைஞர்கள், பொதுமக்கள் பல கி.மீ., துாரம் சென்று மற்ற பகுதியில் உள்ள நுாலகத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது.

முல்லை நகர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் நுாலகம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்றும், அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

சத்தியமூர்த்தி நகர் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை சேர்ந்த எ.த.இளங்கோ கூறியதாவது:

வியாசர்பாடியில் நுாலகம் அமைக்கக்கோரி, 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 2019ல், வடசென்னை தமிழ் சங்கம் சார்பில், சத்தியமூர்த்தி நகரில் இருந்து தலைமை செயலகம் வரை நடந்து சென்று, தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் கோரிக்கை மனு வழங்கினோம்.

தற்போது, வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், வியாசர்பாடியில், 9 கோடி ரூபாயில் திருமண மண்டபம் கட்டும் பணிக்கான இடம் தேர்வு நடக்கிறது. வியாசர்பாடியில் தெருவுக்கு தெரு, திருமண மண்டபங்கள் உள்ளன.

இங்கு நுாலகம் இல்லாததால், இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, திருமண மண்டபத்திற்கு பதிலாக, வியாசர்பாடியில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், பெரிய நுாலகம் கட்டப்பட வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

ஆவடி மாநகராட்சி அருகே எம்.ஜி.ஆர்., திடலில், திருவள்ளூர் மத்திய மாவட்ட பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இங்கு நுாலகம் இல்லாததால், இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, திருமண மண்டபத்திற்கு பதிலாக, வியாசர்பாடியில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், பெரிய நுாலகம் கட்டப்பட வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

ஆவடி மாநகராட்சி அருகே எம்.ஜி.ஆர்., திடலில், திருவள்ளூர் மத்திய மாவட்ட பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *