திரு வேட்டீஸ்வரர் கோவிலில் உழவாரப் பணி

திருவல்லிக்கேணி:திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோவிலில் நேற்ற, இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில், 200க்கும் மேற்பட்டோர் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். செடி, கொடிகள் அகற்றப்பட்டன. கோவிலின் இடது புறமுள்ள பெரிய தெப்பக்குளத்தில் படிந்திருந்த பாசியை அகற்றினர்.

மாலையில், உலக நலன் வேண்டி 5 லட்சம் மந்திரங்கள் ஓதி, கூட்டு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து, திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க, ஈசனை சுமந்து, திருமுறைகள் பாடி, அடியார்கள் புடைசூழ விழிப்புணர்வு திருவீதிவுலா நடந்தது.

இந்த திருவீதிவுலாவை கோவில் செயல் அலுவலர் கங்கா துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *