அமித்ஷா பொம்மையை பறிமுதல் செய்த போலீசார்
அம்பேத்கர் குறித்து அவதுாறாக பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, குன்றத்துார் அருகே சிறுகளத்துாரில் தி.மு.க.,வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிறுகளத்துார் ஊராட்சி தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அமித்ஷாவின் உருவ பொம்மையை தி.மு.க.,வினர் ரகசியமாக எடுத்து வந்து தீ வைத்து எரிக்க முயன்றனர்.
சுதாரித்து கொண்ட குன்றத்துார் போலீசார், அமித்ஷாவின் பொம்மையை எரிக்கவிடாமல் பறிமுதல் செய்து, காவல் நிலையம் எடுத்து சென்றனர்.