யுனானி ஆராய்ச்சி நிலையத்தில் மருந்தில்லா சிகிச்சை 2 நாள் பயிலரங்கம்
தண்டையார்பேட்டை: ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வட்டார யுனானி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சிகிச்சைக்கான 2 நாள் பயிலரங்கம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு யுனானி ஆராய்ச்சி கழகத்தின் பொது இயக்குனர் ஜாஹிர் அஹ்மத் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி, ஒன்றிய சித்தா ஆராய்ச்சி கழக பொது இயக்குனர் முத்துக்குமார், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சிறப்புரை ஆற்றினர். இதில் ரூ.995க்கு முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முதியோர்களுக்கு 40 சதவீதம் கட்டண சலுகையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர். பயிற்சியில் ஏராளமான யுனானி மருத்துவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மருந்தில்லா பிஸிக்கல் தெரபி மூலம் சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.சிறப்பு மருத்துவம் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது