டாக்டர். அகர் வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் கிட்டப் பார்வை மற்றும் டிஜிட்டல் கண்ணயற்சி மாநாடு
சென்னை: டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் கிட்டப்பார்வை மற்றும் டிஜிட்டல் கண்ணயற்சி நோயாளிகளுக்கான மாநாடு வரும் ஜனவரியில் நடைபெற உள்ளது. சென்னை டி.டி.கே சாலையில் உள்ள டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு அந்த மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. அப்போது மருத்துவர்கள் அஸ்வின் அகர்வால், சவுந்தரி, கலாதேவி சதீஷ், ரம்யா சம்பத் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் கிட்டப்பார்வை மற்றும் டிஜிட்டல் கண்ணயற்சி நோயாளிகளுக்கான மாநாடு வரும் ஜனவரி 4ம் தேதி நடைபெற உள்ளது. தொலைக்காட்சி, கணினி, மொபைல் சாதன திரைகள் உட்பட, பல்வேறு திரைகள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய உலகில் கண் ஆரோக்கியத்தில் தற்போது எதிர்கொள்ள வேண்டியிருக்கின்ற சவால்களை இம்மாநாடு முன்னிலைப்படுத்தும்; நீண்ட நேரமாக டிஜிட்டல் திரையை பயன்படுத்தும் நபர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்கள், கிட்டப்பார்வை பாதிப்புள்ள நோயாளிகள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்கள் ஆகியோருக்கு நடைமுறை சாத்தியமுள்ள தீர்வுகளை இம்மாநாடு வழங்கும்.
இதில் பங்கேற்க தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய https://www.dragarwal.com/myopia-patient-summit/ என்ற இணையதளத்திற்கு செல்லலாம் அல்லது 95949 01868 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இந்தியாவின் நகர்ப்புறங்களில் கிட்டப்பார்வை பாதிப்பானது, 1999ம் ஆண்டில் இருந்த 4.44 சதவீதம் என்பதிலிருந்து, 2019ம் ஆண்டில் 21.15சதவீதம் உயர்ந்துள்ளது. இது 2050ம் ஆண்டுக்குள் 48.14 சதவீதமாக அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் இப்பிரச்சனைகளை சமாளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய யோசனைகளையும், செயல்உத்திகளையும் இம்மாநாடு வழங்கும். அத்துடன், பார்வைக்கோளாறுகள் இருக்கிறதா என்று கண்டறிய தொடக்கநிலை சோதனைகளும் மற்றும் உலர்கண் பிரச்சனைக்கான மதிப்பாய்வுகளும் பங்கேற்பாளர்களுக்கு இதில் நடத்தப்படும். மேலும் முன்னணி மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்கும் இன்டராக்டிவ் அடிப்படையிலான குழு விவாதங்களையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.