முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தயாநிதி மாறன் எம்பி சந்திப்பு: ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட் விருதை காண்பித்து வாழ்த்து

சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதிமாறன் எம்.பி. மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து “ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்” விருதை காண்பித்து வாழ்த்து பெற்றனர். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கடந்த அக்டோபர் 24ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 231 இருசக்கர வாகனங்களில் பொது மக்களின் கவனத்தை ஈர்த்து பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை அங்கீகரித்து திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு “ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட் விருது” வழங்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதிமாறன் எம்.பி. மற்றும் மாநில துணைச் செயலாளர்கள் நேரில் சந்தித்து விருதை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர்கள் வே.கவுதமன், நிவேதா ஜெசிகா, கார்த்திக், சுரேஷ் மனோகரன், வாசிம் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *