இரும்பு ராடால் நண்பரை தாக்கிய வாலிபருக்கு வலை
பெரம்பூர்,:பெரம்பூர், மங்களபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர், 26, மணிகண்டன், 28. நண்பர்கள். கடந்த வாரம், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஜெய்சங்கர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மணிகண்டன், ஜெய்சங்கரின் தந்தை, ஆறுமுகத்திடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த, ஜெய்சங்கர், நேற்று முன்தினம் மாலை, மணிகண்டன் வீட்டிற்கு சென்று, மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை கொண்டு மணிகண்டனை பலமாக தாக்கியுள்ளார்.
இதில், இடது பக்க தலையில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து வழக்கு பதிந்த, ஓட்டேரி போலீசார் ஜெய்சங்கரின் பெற்றோரிடம் விசாரிக்கின்றனர். தலைமறைவாக உள்ள ஜெய்சங்கர், கூட்டாளி ஐசக் இருவரை தேடிவருகின்றனர்.