போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
ராயபுரம்,:போதை பொருள் இல்லாத எதிர்காலத்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ் ஈவன்ட்ஸ் மற்றும் புரடக் ஷன்ஸ் மற்றும் தினமலர் நாளிதழ் சார்பில், மாடர்ன் மெட்ராஸ் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
சிறுவர் – சிறுமியர், ஆண்கள் – பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என, அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில், 5 கி.மீ., மற்றும் 10 கி.மீ., என, இரண்டு பிரிவுகளில் மாரத்தான் போட்டி நடந்தது. இதில், 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
செட்டிநாடு ஹரி ஸ்ரீவித்யாலயம் பள்ளியின் மார்க்கெடிங் பிரிவு தலைவர் வினோத், மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தீவுத்திடலில் துவங்கிய மாரத்தான், மன்றோ சிலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம், கொடிமர சாலை வழியாக வந்து, மீண்டும் தீவுத்திடலில் நிறைவு பெற்றது.
ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களை பிடித்த 15 பேருக்கு, 70,000 ரூபாய் மதிப்பிலான பரிசு ‘கூப்பன்’கள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.