டாடா ‘ தனிஷ்க்’ ஜுவல்லரி மதுரையில் வைர கண்காட்சி
சென்னை, டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி, மதுரையில் திருமண வைர கண்காட்சி மற்றும் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மதுரை கே.கே.நகர், அழகர் கோவில் பிரதான சாலையில் உள்ள, ‘கோர்ட்யார்டு பை மேரியட்’ ஹோட்டலில் நடக்கும் இந்த கண்காட்சியில், ஒவ்வொரு பெண்ணின் ஆபரண பெட்டியின் மதிப்பை உயர்த்தும் வகையில், உயர் மதிப்புமிக்க வைரங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன.
பகுதி வணிக மேலாளர் ராம் கவுதம், பிராந்திய வணிகர் பாலாஜி, பகுதி வணிக மேலாளர் அருண் ஜோஷ்வா, பிராந்திய வணிகர் லோகேஷ் ஆகியோர் முன்னிலையில் துவக்கப்பட்ட இக்கண்காட்சி, இன்றுடன் நிறைவடைகிறது.
மதுரை தனிஷ்க் ஜுவல்லரியின் வைர கண்காட்சியில், 20 சதவீத தள்ளுபடியுடன் புதிய ‘கலெக் ஷன்கள்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் தனிஷ்க்கின் உன்னதமான வைர நகை தொகுப்புகளை பார்த்து பரவசப்பட கூடிய அனுபவம், வாய்ப்பை பெற முடியும்.
இந்த நகை தொகுப்புகள், 2 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்கு உள்ளன. ஒவ்வொரு ஆபரணமும், தனிஷ்க்கின் தனித்துவமிக்க, நுணுக்கமான, கைவினைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.