அய்யப்பன் கோவிலில் பிரம்மோற்சவம்

வடசபரி என, அழைக்கப்படும் ராஜா அண்ணாமலைபுரம் அய்யப்ப சுவாமி கோவிலில் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், நாளை துவங்குகிறது.

அதை முன்னிட்டு, மாலை 6:00 மணிக்கு, சபரிமலை அய்யப்பன் கோவில் பிரதான தந்திரி மோகன் குழுவினரால், பிரம்மோற்சவ கொடியேற்றப்படுகிறது.

தொடர்ந்து, 1,008 சகஸ்ர கலச ஸ்தாபனம், பூதபலி, அர்த்தஜாமம் ஆகியவை நடக்கின்றன. வரும் 22ம் தேதி முதல், 24ம் தேதி வரை, மாலை 6:00 மணி முதல், 18ம் படி பூஜை, புஷ்பாபிஷேகம் நடக்கிறது. 25ம் தேதி, இரவு 7:00 மணிக்கு, அய்யப்ப சுவாமி வெள்ளி ரத ஊர்வலம் நடக்கிறது. தீர்த்தவாரி நிகழ்ச்சி, 26ம் தேதி பட்டினப்பாக்கத்தில் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *