ஜெயிலருக்கு மிரட்டல் விடுத்த கைதிகள்
புழல்: புழல் தண்டனை சிறையில், கைதிகளின் அறைகளில் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்வது வழக்கம். இந்த நிலையில், புழல் சிறை பொறுப்பு ஜெயிலர் மணிகண்டன், விசாரணை சிறை ஒன்றில் நேற்று சோதனை மேற்கொண்டார். அப்போது கொலை வழக்கில் கைதான மணவாளன், கார்த்திக், இளந்தமிழன் ஆகிய மூவர், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதன் பின், ஜெயிலர் மணிகண்டனை அவதுாறாக பேசியும், அவரது வீட்டிற்கு பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டியும் உள்ளனர். ஜெயிலர் மணிகண்டன் அளித்த புகாரின்படி, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.