சென்னை ஐ.ஐ.டி., ஆய்வகங்களை பொதுமக்கள் பார்வையிட வாய்ப்பு
சென்னை, சென்னை ஐ.ஐ.டி.,யில், வரும் ஜன., 3, 4ல், திறந்தவெளி அரங்கு அமைக்கப்பட உள்ளது. அன்றைய தினம், அங்குள்ள ஆய்வகங்கள், ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவற்றை, பொதுமக்களும், மாணவர்களும் பார்வையிடலாம்.
முன்னணி தொழில்நுட்பங்கள், புத்தாக்க மையங்கள், ஆய்வு திட்டங்கள், ஆய்வு மாதிரிகள், செயல் விளக்கங்கள் உள்ளிட்டவை விளக்கப்பட உள்ளன.
இதில் பங்கேற்க விரும்புவோர், வரும் 25ம் தேதிக்குள், ‘shaastra.org/open-house’ என்ற இணையதள இணைப்பின் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.