நாதஸ்வர தம்பதிக்கு விருது வழங்கிய நாதப்ரம்மம்

நாதப்ரம்மம் இசை, நாட்டிய கலை களஞ்சியம் சார்பில் 23ம் ஆண்டு சங்கீத ராக மஹோத்ஸவம் துவக்க விழா, மேற்கு மாம்பலத்தில் நேற்று நடந்தது. வரும் 25ம் தேதி வரை, ஏழு நாட்கள் நடக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் விழாவை துவக்கி, நாதஸ்வர கலைஞர்கள் பழனிவேல் – பிரபாவதி தம்பதிக்கு ‘நாதஸ்வர கான மணிகள்’ விருதை வழங்கினார்.

தொடர்ந்து, அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், நாதப்ரம்மம் நிறுவனர் சுப்ரமண்யன், கவுரவ செயலர் பத்ரி நாரயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

நீதிபதி சுப்ரமணியன் பேசுகையில், ”பாரம்பரிய சாஸ்திரிய சங்கீதத்தை தாண்டி, திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படுவதால், தமிழ் சங்கீதத்திற்கும் முக்கியத்துவம் கிடைத்து உள்ளது.

”முன்பெல்லாம், டிசம்பர் மாத கச்சேரிக்கு, ஊரில் இருந்து சென்னைக்கு வருவர். தற்போது, அமெரிக்காவில் இருந்தும் வருகின்றனர்,” என்றார்.

நாதப்ரம்மம் இசை நிகழ்ச்சிகளை நேரில் காண இயலாதவர்கள் www.dinamalar.com என்ற இணையதளத்தில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *