சேத்துப்பட்டில் நாளை அரசு ஊழியர்களுக்கு போட்டி

சென்னை, கன்னியாகுமரியில், திருவள்ளூர் சிலை நிறுவிய, 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன.

இதையொட்டி, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, மாநில அளவில், வினாடி – வினா போட்டி, வரும் 28ம் தேதி நடக்கிறது.

அதற்கான முதல்நிலை மாவட்ட தேர்வு போட்டி, நாளை, சென்னை சேத்துப்பட்டு, கிறிஸ்துவ கல்லுாரி மேல்நிலை பள்ளியில், மதியம் 2:00 மணிக்கு நடக்கிறது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கலாம். போட்டியாளர்கள், தங்கள் விபரங்களை, https://forms.gle/DWCbZGr7nh1rtdMm8 என்ற இணையத்தில், நாளை மாலைக்குள் பதிவு செய்யலாம். இந்த தகவலை, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *