ஒன்றாக எடுத்த படங்களை வெளியிடுவதாக இளம் பெண்ணுக்கு மிரட்டல்: வாலிபர் கைது
அண்ணாநகர்: அமைந்தகரை காவல் நிலையத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, 23 வயது மதிக்கதக்க இளம்பெண் புகார் ஒன்றை அளித்தார். அதில், சென்னையை சேர்ந்த ஹரிபாபு (24) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் ஹரிபாபு என்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பி கடந்த மூன்று வருடம் இருவரும் காதலித்து வந்தோம். நாளடைவில் ஹரிபாபுவின் நடவடிக்கை சரியில்லாததால் அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன்
இதனால் ஆத்திரமடைந்த ஹரிபாபு மீண்டும் காதலிக்குமாறு டார்ச்சர் செய்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் நாங்கள் இருவரும் நெருக்கமாக எடுத்த படத்தை இணைதளத்தில் வெளியிடுவேன் என்றும், பணத்தை கேட்டு மிரட்டி வருகிறார். எனவே காதலிக்கமாறு தினமும் டார்ச்சர் செய்யும் ஹரிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று ஹரிபாபுவை கைது செய்தனர்.