அனுபவமும், அர்ப்பணிப்பும் நிறைந்த பால முரளி கிருஷ்ணா இசை கச்சேரி
‘சலமேல’ மற்றும் ‘தர்பார்’ ராக வர்ணத்துடன், ஆதி தாளத்தில் அமர்க் களமாய் நாரத கான சபாவில் கச்சேரி ஆரம்பித் தார், பிரபல கர்நாடக இசை கலைஞர் குன்னக்குடி பால முரளி கிருஷ்ணா.
ஆண்டாள் அருளிய ‘மார்கழி திங்கள்’ திருப்பாவையை, நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைத்து பாடும்போது, மார்கழியின் குளிர், அரங்கில் தென்றலாய் வீசியது.
அனைவரும் மார்கழிமணத்தில் நெகிழ, முத்துசுவாமி தீட்சிதரின் ஹரிஹர புத்ரம் கீர்த்தனையை பாடி, தன் குரல் வளத்தால், இசையில் அனைவரையும் மூழ்கச் செய்துவிட்டார்.
தியாகராஜ சுவாமியின் ‘நெனஞ்சிரு நானு’ கீர்த்தனையை, மாளவி ராகத்தில் பாடினார். இதில் ஒவ்வொரு கீர்த்தனைக்கும் கல்பனா ஸ்வரங்கள், ஆலாபனைகள், ரகரகமாய் இருந்தது.
அப்போது தான் தெரிந்தது இசையில் அனுபவமும், அர்ப்பணிப்பும் எந்தளவிற்கு இருந்தால் இப்படி பாட முடியுமென!

இதையும் படிங்க
தொடர்ந்து, மூன்று பக்கவாத்தியகாரர்களின்தனி ஆவர்த்தனம் நடந்தது. இதில் தன் கெட்டிக்காரதனத்தை காட்டினார் வயலினில் மைசூர் ஸ்ரீகாந்த்.
பதிலுக்கு மிருதங்கம் திருச்சி சங்கரனும், ரசிகர்களிடம் தன் தனி அடையாளத்தை பதித்தார். இருவருக்கு நான் குறைந்தவனில்லை என்பதுபோல், கடம் குருபிரசாத், தன் பங்குக்கு, ரசிகர்களின் ரசனையை லாவகமாக கையாண்டார்.
இந்த மூவருக்கும், சபையில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவர்கள் வாசித்ததை முக பாவனையில் உற்சாகமாய் ரசித்து, ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது, பாலமுரளி கிருஷ்ணாவின் தனித்த அடையாளங்களில் ஒன்று என அறிய முடியும்.
இறுதியாக, பாபநாசம் சிவன் அருளிய, ‘முருகா முருகா என நீ சொல்லு, முக்தி அடைந்திடும் மார்கம் இதுவே’ கீர்த்தனையை, ஹம்சா நந்தியில் அம்சமாக பாடி அசரடித்தார்.
தன் குரல் வளத்தால், இசை நுணுக்கத்தால், ரசிகர்களை பரவசப்படுத்திய பாலகிருஷ்ணா மற்றும் குழுவினருக்கு, கரகோஷங்களை காணிக்கையாக அளித்தனர் ரசிகர்கள்.