7 ரயில்களில் கூடுதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு

சென்னை, சென்னை – மும்பை உட்பட ஏழு ரயில்களில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது.

பயணியர் வசதிக்காக, விரைவு ரயில்களில், கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேலும் பல விரைவு ரயில்களில், ‘ஏசி’ பெட்டிகள் நீக்கப்பட்டு, முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.

மும்பை சி.எஸ்.டி., – சென்னை சென்ட்ரல், லோக்மான்ய திலக் நிலையம் – காரைக்கால் விரைவு ரயில்களில், தலா ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, வரும் 21ம் தேதி முதல் இணைத்து இயக்கப்படுகிறது.

லோக்மான்ய திலக் – கோவை ரயிலில் இரண்டு முன்பதிவு இல்லாத பெட்டிகள் வரும் 22ம் தேதி முதலும், லோக்மான்ய திலக் – மதுரை ரயிலில், ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி வரும் 25ம் தேதி முதலும் இணைத்து இயக்கப்பட உள்ளது.

லோக்மான்ய திலக் நிலையம் – சென்ட்ரல் ரயிலில், வரும் 30ம் தேதி முதல் ஒரு முன்பதிவு இல்லாத பெட்டியும், லோக்மான்ய திலக் – சென்ட்ரல் அதிவிரைவு ரயிலில் வரும் 25ம் தேதி முதல் ஒரு முன்பதிவு இல்லாத பெட்டியும் இணைத்து இயக்கப்பட உள்ளது.

லோக்மான்ய திலக் நிலையம் – கொச்சுவேலி ரயிலில் வரும் 28ம் தேதி முதல் ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *