டென்னிஸ் பால் கிரிக் கெட் திருத்தணி வீரருக்கு மவுசு
திருத்தணி, அகில இந்திய டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கம் சார்பில், உ.பி., மாநிலம் கொரக்பூரில் வரும் 21 முதல், 27ம் தேதி வரை, டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இதில் மொத்தம், 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளில் விளையாடுவதற்கான வீரர்கள் தேர்வு ஏலம், கொரக்பூரில் சமீபத்தில் நடந்தது.
ஏலத்தில், தமிழகத்தில் இருந்து திருத்தணி மூவர்; ராணிப்பேட்டை ஏழு; திருச்சி நான்கு; கடலுார், சேலம் தலா இரண்டு என மொத்தம், 18 பேர் பங்கேற்றனர். இதில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ் டைகர்ஸ் அணியில் 15 வீரர்களும், திருத்தணியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஹைதராபாத் வாரீஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
ஒவ்வொரு வீரரும், குறைந்தபட்சம், 5,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 24,000 ரூபாய் வரை ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதில் செந்தில்குமார் என்பவரை, 24,000 ரூபாயக்கு, ஹைதராபாத் வாரீஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.