வீட்டின் முன் நிறுத்தி இருந் த கார் தீப்பிடித்து எரிந்தது
தாம்பரம்: பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜித். தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர், தாம்பரம் பகுதியில் 8 மாதங்களுக்கு முன் அடமானம் வைத்திருந்த தனது காரை, நேற்று மீட்டு சென்று, வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி இருந்தார். அப்போது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்து, கார் கொழுந்து விட்டு எரிந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அஜித் உடனடியாக சம்பவம் குறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது.