போலீஸ்காரரின் பைக் திருடியோர் பிடிபட்டனர்
கொடுங்கையூர்: கொடுங்கையூர், கண்ணதாசன் நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் நவீன்குமார், 37. இவர், ராயபுரம் காவல் நிலையத்தில், போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
நவீன்குமார் நேற்று, கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் சுவாமி கும்பிட்டு, வெளியே வந்து பார்த்தபோது, அவரது ‘பஜாஜ்’ பால்சர் பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்
இது குறித்து, கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர். இதில், வியாசர்பாடியைச் சேர்ந்த அமுல்ராஜ், 25, மதன்குமார், 26, ஆகியோர் திருடிச் சென்றது தெரிய வந்தது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர்களை, போலீசார் நேற்று கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.