மூதாட்டியின் 4 சவரன் செயின் மாயம்
சென்னை, வடபழனி, தெற்கு சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம், 72. அவரது அக்கா சுப்புலட்சுமி, 79, நேற்று முன்தினம் காலை, ஆர்.ஏ.புரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்றார்.
பின், மதியம் வீடு திரும்பியபோது, அவர் கழுத்தில் அணிந்து இருந்த, 4 சவரன் செயின் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து, மீனாட்சி சுந்தரம் நேற்று மாலை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.