காசிமேடில் மீன் வரத்து அதிகரிப்பு
காசிமேடு:கார்த்திகை மாத கடைசி நாளான நேற்று, காசிமேட்டில், கடந்த வாரத்தைவிட அதிக கூட்டம் அதிகம் காணப்பட்டது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஞாயிறுதோறும் மீன் வாங்க, திருவிழா கூட்டம் போல் மக்கள் கூடுவர். கார்த்திகை மாத கடைசி நாளான நேற்று, அதிகாலை முதலே, வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மீன்பிடிக்க சென்ற 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின.
கானாங்கத்த, பாறை, கிளிச்ச உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகம் இருந்தது. மீன்வரத்து அதிகம் இருந்தாலும், மக்கள் கூட்டத்தால், மீன் விலை உயர்ந்து காணப்பட்டது. இருந்தும் பொதுமக்கள் பேரம் பேசி மீன்களை வாங்கி சென்றனர்.
மீனவர்கள் கூறுகையில்,’படகுகளில் மீன் வரத்தும் அதிகம் இருந்தாலும், மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், மீன் விலை உயர்ந்து காணப்பட்டது. வழக்கமாக ஒரு படகில் பிடித்து வரும் மீன்கள், 2 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும். நேற்று, 3.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இரு வாரங்களாக போதிய விலை கிடைக்காத நிலையில், இந்த வாரமே நல்ல லாபம் கிடைத்தது’ என்றார்.
மீன் விலை நிலவரம்
———————
மீன் வகை கிலோ (ரூ.)
வஞ்சிரம் 800 – 1000
கறுப்பு வவ்வால் 500 – 600
வெள்ளை வவ்வால் 1100
சங்கரா 300
சின்ன சீலா 200 – 250
சின்ன பாறை 150 – 200
பெரிய பாறை 300 – 400
கனாகத்த 150 – 200
கிளச்ச 100
நண்டு 200 – 300
இறால் 200 – 400