நள்ளிரவு ஆபாச நடனம் ஐவர் கைது
ஜாபர்கான்பேட்டை:ஜாபர்கான்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவில் இயங்கும் தனியார் கிளப்பில், நள்ளிரவு வரை அத்துமீறி, ஆபாச நடனமாடுவதாக, அதிதீவிர குற்றத்தடுப்பு போலீசாருக்கு புகார் வந்தது.
கடந்த 13ம் தேதி நள்ளிரவு, அங்கு சென்று போலீசார் ஆய்வு நடத்தியதில், விதிமீறிலில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து, கிளப் உரிமையாளர் முகப்பேரைச் சேர்ந்த தருண், 47, சப்ளையர்கள் வினோத்குமார், 33, பாலமுருகன், 22, கொடிஷ், 27, கணக்காளர் விஜயா அமிர்தராஜ், 38, ஆகிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவ இடம் எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையம் என்பதால் வழக்கை, எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்திற்கு நேற்று மாற்றி, ஐவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.