ரூ.2.22 கோடியில் தெருவிளக்குகள்
சோழிங்கநல்லுார்:இ.சி.ஆர்., ஓ.எம்.ஆர்., பகுதிகளை உள்ளடக்கிய சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன. விரிவாக்க பகுதியானதால், புதிதாக பல தெருக்கள் உருவாக்கப்பட்டன.
இந்த தெருக்களில், சாலைகள் போடப்பட்டது. இங்கு, கம்பம் நட்டு தெருவிளக்குகள் அமைக்கவும், உயரம் குறைவான பழைய கம்பங்களை மாற்றிவிட்டு, புதிய கம்பம் நட்டு விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டன.
இதற்காக, இ.சி.ஆர்., ஓ.எம்.ஆர்., சாலைகள் மற்றும் ஒன்பது வார்டுகளில், 242 புதிய கம்பங்கள் நட்டு, கேபிள் பதித்து, தெருவிளக்குகள் அமைக்க, 2.22 கோடி ரூபாய் மாநகராட்சி ஒதுக்கி உள்ளது. பருவமழை முடிந்தபின், இந்த பணி துவங்கும் என அதிகாரிகள் கூறினர்.