கூவம் ஆற்றில் விழுந்த பெண் மீட்பு
சென்னை, விருகம்பாக்கம் அருகே, கூவம் ஆற்றில் நேற்று காலை 9:30 மணியளவில், 45 வயது மதிக்கத்தக்க பெண் தவறி விழுந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
சென்னை போலீஸ் கமிஷனரின் சிறப்பு அதிவிரைவு படையினர், ‘பொக்லைன்’ இயந்திரத்தை பயன்படுத்தி கூவத்தில் தத்தளித்த பெண்ணை மீட்டனர். அவர் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்துாரைச் சேர்ந்த தேவி, ௪௦, என தெரிய வந்தது.
விருகம்பாக்கம் போலீசார் உண்மையில் பெண் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்வதற்காக குதித்தாரா என விசாரித்து வருகின்றனர்..
சிறப்பாக செயல்பட்டு பெண்ணை மீட்ட சிறப்பு அதிவிரைவு படை வீரர் வினோத்தை கமிஷனர் அருண் பாராட்டினார்.