தெருநாய்கள் கடித்த புள்ளிமான் பலி
சித்தாமூர், சித்தாமூர் அடுத்த தொன்னாடு கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரி அருகே, நேற்று, மான் குட்டி ஒன்றை தெருநாய்கள் துரத்திக் கடித்து உள்ளன.
இதை பார்த்த பகுதிவாசிகள், நாய்களை விரட்டி மான் குட்டியை மீட்டனர். ஆனால், நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த மான் குட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இது குறித்து, வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த மான் குட்டியை மீட்டு, காட்டுதேவாத்துார் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, கொல்லத்தநல்லுார் காப்புக்காட்டில் புதைத்தனர்.