மழையால் வேலை வாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு
சென்னை, மாதவரத்தில் இன்று நடக்க இருந்த, தனியார் துறையின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம், கனமழையால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாதவரத்தில் உள்ள, புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இன்று நடக்க இருந்தது.
முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 20,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய இருந்தனர்.
கனமழை காரணமாக, தேதி அறிவிப்பின்றி தற்காலிகமாக முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் முகாம் நடக்கும் தேதி மற்றும் நேரம் குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.