தாம்பரம் – திருவனந்தபுரம் சிறப்பு ரயில்
சென்னை, பயணியரின் தேவை கருதி, தாம்பரம் – திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜன., 3, 10, 17, 24 மற்றும் 31ம் தேதி வெள்ளிக்கிழமைகளில், தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரயில்கள் இயக்கப்படும். தாம்பரத்தில் இரவு 7:30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 11:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
திருவனந்தபுரத்தில் ஜன., 5, 12, 19, 26 மற்றும் பிப்., 2 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில், மதியம் 3:25 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 7:35 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.