திருத்தணி கோவிலில் கெட்டுப்போன பஞ்சாமிர்தம் பறிமுதல்
திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன், மலைக்கோவில் கடைகளில் வாங்கும் பஞ்சாமிர்தம் காலாவதியாகியும், கெட்டு போயும் இருப்பதாக, ஹிந்து சமய அறநிலைய துறை கமிஷனர் அலுவலகத்திற்கு, பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, திருத்தணி கோவில் இணை கமிஷனர் ரமணி மற்றும் கோவில் மேற்பார்வையாளர்கள், மலைக்கோவிலில் பஞ்சாமிர்தம் விற்கப்படும் கடைகளில், நேற்று சோதனை நடத்தினர்.
இதில் காலாவதி தேதி குறிப்பிடப்படாத 50 கிலோ பஞ்சாமிர்தம் டப்பாக்களை பறிமுதல் செய்து, கோவில் ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். கெட்டுபோன பொருட்களைவிற்க் கூடாது என, கடைகாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.