மாங்காடு குடியிருப்பை சூழ்ந்த வெள்ள நீர்
குன்றத்துார், மாங்காடு, படப்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், நேற்று கொட்டி தீர்த்த கனமழையால், மாங்காடு காவல் நிலையம், அதன் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது.
படப்பை பஜார் வீதியில் வெள்ள நீர், குட்டை போல் தேங்கி நின்றதால், அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
வரதராஜபுரம் பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பு கருதி, தங்கள் வாகனங்களை, அப்பகுதி மேம்பாலங்கள் மீது நிறுத்தியுள்ளனர்.
படப்பை ஏரி, சோமங்கலம் ஏரி முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் வெளியேறி வருகிறது.