செங்கல்பட்டில் 21ல் மாவட்ட ஓபன் செஸ் போட்டி துவக்கம்
சென்னை, செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஓபன் மற்றும் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, வரும் 21ம் தேதி, செங்கல்பட்டில் உள்ள வித்யா சாகர் குளோபல் பள்ளியில் துவங்குகிறது.
ஓபன் முறையில் நடக்கும் இப்போட்டியில், முதல் நாளில் மாலை 3:00 முதல் 5:00 மணி வரை இரண்டு சுற்றுகள் நடக்கிறது. அடுத்த நாளான, 22ம் தேதி, காலை 9:00 மணிக்கு மூன்றாவது சுற்று துவங்கி, மாலை 3:00 மணி வரை, ஆறு சுற்றுகள் வீதம் நடக்கின்றன.
போட்டியில் வெற்றி பெற்று, முதல் எட்டு இடங்களை பிடிப்போருக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. பங்கேற்க விரும்புவோர், 20ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். விபரங்களுக்கு, 97900 51308 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க சங்கம் தெரிவித்துள்ளது.