பொன்னேரி சார் – பதிவாளர் ஆபீசில் ரெய்டு
பொன்னேரி, பொன்னேரி சார் – -பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவு, சான்றுகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு, தாராளமாக லஞ்ச லாவண்யம் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான குழுவினர் நேற்று, பொன்னேரி சார்- – பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில், கணக்கில் வராத பணம், 79,100 ரூபாய் சிக்கியது. சார் – -பதிவாளர் குமரேசனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.