எஸ். பி. ஆர்., சிட்டியில் இணைந்த ஜோயாலுக்காஸ்
வடசென்னையில் விரைவில், 5,000 கடைகளுடன் திறக்கப்பட உள்ள எஸ்.பி.ஆர்., சிட்டி வளாகத்தில், முதலாவது நகைக்கடையாக ஜோயாலுக்காஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
எஸ்.பி.ஆர்., இந்தியா நிறுவனம், சென்னை பெரம்பூரில் தமிழகத்தில் மிகவும் உயரமான குடியிருப்பை, 48 தளங்களுடன் அமைத்து வருகிறது. இதில், 5,000 சில்லரை விற்பனை கடைகளுடன் எஸ்.பி.ஆர்., சிட்டி அமைகிறது.
இது குறித்து எஸ்.பி.ஆர்., இந்தியா மேலாண் இயக்குனர் ஹித்தேஷ் கவாத் கூறியதாவது:
ஜோயாலுக்காஸ் நிறுவனம், எஸ்.பி.ஆர்., சிட்டியில் விற்பனையகம் துவக்குவதை பெருமையாக கருதுகிறோம். இதன் வாயிலாக, எஸ்.பி.ஆர்., சிட்டிக்குள் மிகச்சிறந்த வசதிகள், சில்லரை விற்பனை மையங்களை அமைப்பதற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்ற உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜோயாலுக்காஸ் குழும தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது:
எஸ்.பி.ஆர்., சிட்டியில் எங்கள் விற்பனையகம் சிறப்பாக செயல்படும். சென்னை நகரம், ஜோயாலுக்காஸ் நிறுவனத்திற்கு சிறந்த இடமாக இருக்கிறது. இங்கு, நிறுவனத்தின் ஷோரூம்களை உயர்த்த திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பி.ஆர்., சிட்டியில், நாட்டின் மிகப்பெரிய சில்லரை மற்றும் முழு விற்பனை அங்காடிகளும் அமைந்துள்ளன.