சென்னையில் கனமழை எதிரொலியாக பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் 39 கட்டுப்பாட்டு அறைகள்: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 39 சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டலத்தில் 9 கட்டுப்பாட்டு அறைகளும், தெற்கு மண்டலத்தில் 13 கட்டுப்பாட்டு அறைகளும், வடக்கு மண்டலத்தில் 9 கட்டுப்பாட்டு அறைகளும், மேற்கு மண்டலத்தில் 8 கட்டுப்பாட்டு அறைகளும் என 39 சிறப்பு கட்டுப்பாட்டறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அவசர உதவிக்கு தங்களது காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளுக்கு ெதாடர்பு கொண்டு உதவி பெறலாம் என்று பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறியுள்ளார்.

கட்டுப்பாட்டு அறைகள் காவல் நிலையம் தொடர்பு எண்

* செங்கல்வராயன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேப்பேரி 7824867234
* எஸ்.எம். சாலை சமுதாய நலக்கூடம், கீழ்பாக்கம் சேத்துப்பட்டு 9384039045
* தக்‌ஷன் நாடார் சங்கம், மேட்டு தெரு அயனாவரம் 9498100052
* விஆர் பிள்ளை தெரு அண்ணா சதுக்கம் 9498100024
* ஏபிவிபி திருமண மண்டபம் நுங்கம்பாக்கம் 9498100042
* ராஜரத்தினம் மைதானம் எழும்பூர் 9498213703
* ஹேமமாலினி ஹால், எண்.12, 1வது தெரு, வி.பி.ராமன் சாலை ராயப்பேட்டை 9498118840
* சாவித்ரி அம்மால் ஓரியண்டல் பள்ளி, கல்வி வாரு தெரு மயிலாப்பூர் 9498100041
* சென்னை உயர்நிலை பள்ளி, சிஎச்எஸ் கோட்டூர், புதிய தெரு, அவ்வை காலனி கோட்டூர்புரம் 944444664
* இந்து அடுக்குமாடி குடியிருப்பு சாஸ்திரி நகர் 8939003299
* ராம்நகர் புதிய கட்டிடம், 6வது மெயின் ரோடு வேளச்சேரி 9498122707
* வர்த்தக மையம் சைதாப்பேட்டை 9445967402

வர்த்தக மையம் சைதாப்பேட்டை 9445967402
* சின்னதம்பி கல்யாண மண்டபம் நீலாங்கரை 9498100174
* டி.பி. ஜெயின் கல்லூரி துரைப்பாக்கம் 9962343724
* மவுண்ட் காவல் நிலைய சமுதாய நலக்கூடம் புனித தோமையர் மலை 9865166803
* பாலாஜி ரெசிடென்சி, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் காலனி நந்தம்பாக்கம் 9080290477
* ஹரிஹந்த் மஹால், எம்.ஜி.ஆர். ரோடு பழவந்தாங்கல் 8220295183
* எஸ்பி கிராண்ட் பேலஸ், ராம் நகர் மடிப்பாக்கம் 8122426105
* வி.ஜி மஹால், லக்கி கல்யாண மண்டபம் அருகில் ஆதம்பாக்கம் 9629333366
* மாநகராட்சி கட்டிடம், எம்ஆர் ரோடு மாம்பலம் 9498131375
* செல்வ விநாயகர் மண்டபம், பி.டி. ராஜா ரோடு கே.கே.நகர் 9498100191
* சேர்மேன் கல்யாண மண்டபம் எம்.ஜி.ஆர். நகர் 9498100188
* மண்ணடி காவலர் குடியிருப்பு எஸ்பிளனேடு 9498199817
* சென்ட்ரல் சிக்னல் லைட் பூக்கடை 8122360906
* என்ஆர்டி பாலம் சிறப்பு கட்டுப்பாட்டறை வடக்கு கடற்கரை 9498100218
* மண்டலம் 5 அலுவலகம், மூலக்கொத்தளம் வண்ணாரப்பேட்டை 9498100224
* சென்னை மாநகரட்சி பள்ளி, மாணிக்கம் தெரு வண்ணாரப்பேட்டை 9498130199
* புனித பீட்டர் பள்ளி, மேற்கு மாதா தெரு ராயபுரம் 9498100232
* புளியந்தோப்பு சமுதாய கூடம், கன்னிகாபுரம் புளியந்தோப்பு 8148239521

* டாக்டர் அம்பேத்கர் கல்லூரி, இ.எச்.ரோடு, வியாசர்பாடி எம்.கே.பி. நகர் 7548899151
* சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளி, ஸ்கூல் ரோடு செம்பியம் 8056846652
* பெரியார் நகர், 70 அடி ரோடு, கார்த்திக்கேயன் சாலை பெரவள்ளூர் 9940191499
* சிட்கோ நகர் போலீஸ் பூத் வில்லிவாக்கம் 7550150510
* திருமலை நகர் மற்றும் சாஸ்திரி நகர் சந்திப்பு மாதவரம் 9498145419
* கோயம்பேடு டேனியல் தாமஸ் உயர்நிலை பள்ளி கோயம்பேடு 9944046697
* சீதாலஷ்மி கல்யாண மண்டபம் மதுரவாயல் 9629093496
* காளியம்மாள் கோயில் தெரு, விருகம்பாக்கம் விருகம்பாக்கம் 7305210015
* கஜலஷ்மி நகர் சமுதாய கூடம், 6வது பிளாக், மேற்கு முகப்பேர் நொளம்பூர் 9600892123
* சமுதாய கூடம், எம்எம்டிஏ ரோடு அரும்பாக்கம் 8807387100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *