சென்னை பல்கலை ‘சாம்பியன் தென் மண்டல செஸ் போட்டி

சென்னை, பல்கலைகளுக்கு இடையே, தென் மண்டல அளவிலான செஸ் போட்டியில், சென்னை பல்கலை பெண்கள் அணி முதலிடத்தை பிடித்து, ‘சாம்பியன்’ பட்டத்தை வென்றது

இந்திய பல்கலைகளின் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து, தென் மண்டல பல்கலைகளுக்கு இடையிலான பெண்கள் செஸ் போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பல்கலை வளாகத்தில் நடந்தது.

போட்டியில், சென்னை பல்கலை, அழகப்பா பல்கலை, அண்ணா பல்கலை, திருவள்ளூர் பல்கலை என, நாடு முழுதும் இருந்து, 60 பல்கலை அணிகள் பங்கேற்றன. ஆறு சுற்றுகள் வீதம் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியில், 60 பல்கலைகளை எதிர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, சென்னை பல்கலை மாணவியர் அணி தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. முடிவில், சென்னை பல்கலை அணி, அனைத்து சுற்றுகள் அடிப்படையில், ஆறு புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து, ‘சாம்பியன்’ பட்டத்தை தட்டிச் சென்றது.

இரண்டாம் இடத்தை ஐந்து புள்ளிகளுடன் அண்ணா பல்கலை அணியும், மூன்றாம் இடத்தை, அதே ஐந்து புள்ளிகளுடன், கோவை பாரதிதாசன் பல்கலை அணியும் கைப்பற்றின. எஸ்.ஆர்.எம்., பல்கலை, கேரளாவின் கோழிக்கோடு பல்கலை உள்ளிட்ட அணிகள், அடுத்தடுத்த இடங்களை வென்றன.

சென்னை பல்கலை அணியில், எம்.ஓ.பி., மாணவியான கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, அதே கல்லுாரியின் மாணவிகளான சவீதா ஸ்ரீ, ரக்ஷிதா ரவி, நயானிகா, ஹர்ஷினி, எஸ்.எஸ்., ஜெயின் கல்லுாரியின் ரிந்திரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *