சவால் விஜய்க்கு தி.மு.க.,
திருவொற்றியூர், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, மனிதநேய உதய நாள் என்ற தலைப்பில், திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலர் தனியரசு தலைமையில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, திருவொற்றியூர், பெரியார் நகரில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பேசுகையில், ”ஆட்சியே இல்லாவிட்டாலும், 1,000 பேர் கூடுவது திருவொற்றியூரில் மட்டுமே சாத்தியம். தி.மு.க., கடைக் கோடி தொண்டனும், திராவிடம் குறித்து விளக்கி பேசுவான்.
விஜய், சீமான் போன்ற நடிகர்கள் உரசி பார்க்க முடியாத எக்கு கோட்டை தி.மு.க.,” என்றார்.
இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் சங்கர், சுதர்சனம், மணலி மண்டல குழு தலைவர் ஆறுமுகம், தி.மு.க., மேற்கு பகுதி செயலர் அருள்தாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.