முத்து மாணிக்கம் கண்டனம் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு காசி

சென்னை, ‘மன்னராட்சி வேண்டாம் என சொல்பவர்கள் குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்து, துணை பொதுச்செயலர் ஆகலாமா’ என, கவிஞர் காசிமுத்துமாணிக்கம் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை அண்ணாநகரில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை ஒட்டி, அம்பத்துார் தெற்கு பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் வசந்த் தலைமையில் மரக்கன்று நடும் விழா, நலத் திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.

அதில், தி.மு.க., வர்த்தகர் அணி செயலர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் பேசியதாவது:

முதல்வர் ஸ்டாலின், தன் மகன் உதயநிதியை துணை முதல்வராக்கியதன் வாயிலாக, மன்னராட்சி தொடர்கிறது என, வி.சி.,யில் சுரண்டல் லாட்டரி உரிமையாளர் பேசி இருக்கிறார்.

முதல்வர் மனம் உவந்து உதயநிதியை துணை முதல்வராக்கும் முடிவை எடுக்கவில்லை. சட்டசபை தேர்தலில் மிக அதிகமான ஓட்டுகளில் வென்றபோதும் உதயநிதியை உயர்த்தவில்லை.

கட்சியின், 72 மாவட்ட தி.மு.க.,வும் தீர்மானம் போட்டு, பொதுக்குழு, செயற்குழுவில் ஆதரவாக குரல் எழுப்பியதை பார்த்து, தாமதமான தீர்ப்பு தோல்விக்கு சமம் என்பதால், வேறு வழியில்லாமல் துணை முதல்வராக்கினார். அரசியலுக்கு தியாகமும், அனுபவமும்தான் முக்கியம்.

மன்னாராட்சி வேண்டாம் என சொல்பவர்கள், குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்து, 7,000 கோடி ரூபாய் வழக்கில் சிக்கி இருக்கும் ஒருவர், குறுக்கு வழியில் ஓராண்டிற்குள், துணைப் பொதுச்செயலர் ஆகலாமா?

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *