‘இவால்வ்’ புதிய திட்டம் அறிமுகம் பணிக்கு செல்லும் பெண்களுக்காக
சென்னை, உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு, மனநல பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை, ‘மைண்ட் வெல்’ நிறுவனம் வழங்கி வருகிறது.
வேலைக்கு செல்லும் பெண்களுக்காகவே, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, ‘இவால்வ்’ என்ற புதிய திட்டத்தை, கிண்டியில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்துள்ளது.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு, ‘இவால்வ்’ விருதுகள் வழங்கப்பட்டன. வாழ்நாள் சாதனையாளர் விருது, டாக்டர் சாந்தி ரங்கநாதனுக்கு வழங்கப்பட்டது.
அதேபோல், நாகலட்சுமி, ஸ்ரீமதி, எரிண்டா ஷா, சவுமியா மோனி, ராஜலட்சுமி, மாதவி லதா ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், இவால்வ் திட்டத்தின் தலைமை அதிகாரி திக்விஜய் ஸ்ரீனிவாஸ் உட்பட, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
காக்னிசன்ட் நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவர் சந்திரசேகரன் கூறுகையில், ”நிறுவனங்களில் பெண்களுக்கான பிரச்னைகளுக்கு தீர்வு காண, நல்ல திட்டமிடல்களை உருவாக்க வேண்டும்.
”மனநலம், உளவியல், உடல்நலம் சார்ந்த பிரச்னைக்கு தீர்வு காண இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார்.