ரூ.8 லட்சம் மோசடி ‘லிங்க்’ அனுப்பி
சென்னை: சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் ரகுவீர் சாகர். அவரின் மொபைல் போன் எண்ணிற்கு, ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக, மர்ம நபர்கள், ‘லிங்க்’ அனுப்பி உள்ளனர்.
அதை, அவர் கிளிக் செய்தபோது, ரகுவீர் சாகர் வங்கி கணக்கில் இருந்து, 8 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதேபோல, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. சில நாட்கள் முன், அவரின் ஏ.டி.எம்., கார்டு தொலைந்து போய் உள்ளது. நேற்று அவரின் வங்கி கணக்கில் இருந்து, 14,000 ரூபாய் எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்